Categories
சினிமா தமிழ் சினிமா

படகில் உடற்பயிற்சி செய்யும் ரெஜினா… தீயாய் பரவும் வீடியோ…!!!

நடிகை ரெஜினா படகில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நடிகை ரெஜினா ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன் ,மிஸ்டர் சந்திரமௌலி உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . தற்போது இவர் நடிப்பில் சக்ரா, கசடதபற  ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . மேலும் நடிகை ரெஜினா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழித்  திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் .

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் . இந்நிலையில் நடிகை ரெஜினா படகில் நின்று ரிஸ்கான உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |