நடிகை கீர்த்தி சுரேஷ் பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . இதன்பின் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் ,சூர்யா ,விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். மேலும் புகழ் பெற்ற நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’ படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது .
#RangDe
Another video of Keerthi jamming at Devi’s studio .
@dirvenky_atluri @ThisIsDSP @actor_nithiin @SitharaEnts @KeerthyOfficial pic.twitter.com/5lRwLDOWqn— pcsreeramISC (@pcsreeram) February 4, 2021
நடிகை கீர்த்தி சுரேஷ் படங்களில் நடிப்பது மட்டுமல்லாது பன்முகத் திறமை கொண்டவர் . இவர் ஓவியங்கள் வரைவது , வயலின் வாசிப்பது போன்ற பல திறமைகளை வெளிப்படுத்தினார் . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பாடல் பாடும் வீடியோவை புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தேவி ஸ்டூடியோவில் ‘ரங் தே’ படத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் வேளையில் கீர்த்தி பாடல் பாடியுள்ளார் . கீர்த்தியின் இனிமையான குரலைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் .