Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படியோ தப்பிச்சாச்சு… காற்றின் வேகத்தால் கவிழ்ந்த படகு… கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்கள்…!!

படகு கவிழ்ந்த விபத்தில் 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் திட்டு பகுதியில் வசித்து வரும் குணசேகரன், தமிழன், வீரத்தமிழன் போன்றோரும் சிங்கார குப்பம் பகுதியில் வசித்து வரும் அப்பு என்பவரும் குணசேகரனுக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு வெள்ளாற்று முகத்துவாரம் பகுதியில் இவர்களது படகு வந்து கொண்டிருக்கும் போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நிலைதடுமாறி படகு கவிழ்ந்துவிட்டது. இதில் படகில் பயணித்த 4 பேரும் தண்ணீரில் விழுந்து விட்டனர். இந்நிலையில் குணசேகரன், அப்பு ஆகிய இருவரும் நீந்தி கரை சேர்ந்து விட்டனர்.

ஆனால் தமிழன், வீரத்தமிழன் ஆகிய 2 பேரும் கரை சேரவில்லை. இதுகுறித்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் கடலோர காவல் துறையிடம் தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து மாயமான தமிழன், வீர தமிழன் ஆகிய 2 பேரையும் கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு பேரின் உடல்களும் இறந்த நிலையில் வடக்கு முடசல் ஓடை என்ற பகுதியில் கரை ஒதுங்கி விட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த இருவரின் உடல்களையும் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |