Categories
தேசிய செய்திகள்

என்னடா இது…. நடுராத்திரியில பைக் தன்னால போகுது…. வெளியான திகில் காணொளி…!!

பைக் ஒன்று நள்ளிரவில் தானாக நகர்ந்து சென்று பின்னர் கீழே விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் பைக் ஒன்று தானாகவே நகர்ந்து செல்லும் காட்சியானது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை ட்விட்டரில் ஆம்பர் ஜோதி என்பவர் பகிர்ந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள வீட்டின் வாசலில் முன்பு இரண்டு பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்துள்ளது.

இந்நிலையில் நள்ளிரவில் அதில் ஒரு பைக் மட்டும் தானாக சற்று தூரம் நகர்ந்து சென்று பின்னர் கீழே விழுந்த காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. மர்மமான முறையில் தானாகவே நகர்ந்து அந்த பைக் விழுந்துள்ள காட்சியை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |