Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாளை முதல் டிக்கெட் விற்பனை… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாகவும் முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரு அணிகள் இடையே பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. அந்த டிக்கெட்டுகள் www.Paytm.com, www.insider.in ஆகிய ஆன்லைன் தளங்களில் நாளை காலை 10 மணி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. கவுண்டர்களின் டிக்கெட் விற்பனை கிடையாது.

Categories

Tech |