முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் கோபால். இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோபால் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் கொலையாளிகள் பயன்படுத்திய தடையங்கள் ஏதாவது இருக்கின்றதா? என்று வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் எதற்காக கோபால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.