Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை தமிழகம் வரும் சசிகலா…. முதல்வர் தனது பிரச்சாரத்தில்…. சசிகலா பற்றி பேசுவாரா…??

முதல்வரின் 5 ஆம் கட்ட பிரச்சாரத்தில் சசிகலா பற்றி பேசுவாரா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர  பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளார். ஏற்கனவே நான்கு கட்ட பிரச்சாரங்கள் முடித்த நிலையில் தற்போது 5வது கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி போரூர், அம்பத்தூர், ஆவடி, மாதவரம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சசிகலா பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் நிலையில் சசிகலா குறித்து முதல்வர் தனது பிரச்சாரத்தில் பேசுவாரா? என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும் முதல்வர் நடத்தும் பிரச்சாரத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |