விவசாயிகள் நேற்று நடத்திய போராட்டம் போராட்டத்தின் போது பயன்படுத்திய கொடி தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் வேளாண் சட்டங்க்ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விவசாய அமைப்புகள் சார்பில் நேற்று நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பஞ்சாப்பின் லூதியானாவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது ஒரு ட்ராக்டரில் காலிஸ்தான் பிரிவின வாத தலைவர் பிரிந்தன்வாலே தோற்றத்தில் ஒற்றைக் கொடி ஒன்று பறந்தது.
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தடை செய்யப்பட இந்த கொடி காட்டி இருந்தால் தவறு என பாஜக கிஷான் சங்க தலைவர் ராகேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறை வெடித்து சூழ்நிலையில் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.