கர்ப்பிணி தாய் தனது மகனை கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வசிப்பவர் ஷாகிதா. மூன்று மாத கர்ப்பிணியான இவருக்கு மூன்றாவதாக ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சமையலறையில் உள்ள கத்தியை எடுத்து ஷாகிதா தன்னுடைய குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் பக்கத்து வீட்டாரிடம் இருந்து காவல்துறையினரின் அவசர அழைப்பு எண்ணை பெற்று காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். இந்த சம்பவம் அதிகாலை சுமார் 4 மணியளவில் அரங்கேறியுள்ளது. ஷாகிதாவின் இந்த கொடூர செயல் அவருடைய குடும்பத்தார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவருடைய கணவர் சுலைமான் சம்பவத்தன்று வீட்டில் இல்லை என்று கூறபடுகிறது. க்ஷத்திராவிற்கு உளவியல் சார்ந்த பிரச்சினைகள் எதுவும் இருக்கிறதா என்று ஆராய்ந்தபோது அதுவும் இல்லை என்று சுலைமான் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் ஷாகிதாவை கைது செய்துள்ளனர். இந்நிலையில் தீவிர விசாரணைக்கு பின்னரே கொலைக்கான காரணம் மற்றும் ஷாகிதாவின் உடல்நலம் குறித்து வெளியாகும் என்று கூறப்படுகிறது. கர்ப்பிணி தாயே தனது மகனை கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.