இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Senior Executive & Manager பணிகளுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களினை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IIT Chennai வேலைவாய்ப்பு 2021 :
Senior Executive & Manager பணிகளுக்கு எனத் தலா ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Senior Executive – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Mech/ EEE/ ECE/ CSE/ Chemical/ Metallurgy பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Manager – MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இது போன்ற பணிகளில் 6 முதல் 8 ஆண்டுகள்வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
Senior Executive – ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை
Manager – ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை
தேர்வுச் செயல்முறை :
Test அல்லது Interview மூலமாகவே பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.