கொழுப்பை குறைக்க எந்த 5 உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
பொதுவாக நாம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடல் எடை கூடும் என்று நினைத்து சில உணவு உணவுகளை தவிர்ப்பதுண்டு. ஆனால் நம்முடைய உடல் ஆற்றலுடன் செயல்பட சிறிது கொழுப்பு அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனிமேல் கொழுப்பு நிறைந்த உணவுகள் ஒட்டுமொத்தமாக ஒதுக்க வேண்டாம். கீழ்க்கண்ட ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக் கொள்வதால் உங்களின் உடல் எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரியும். அவை என்ன உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.
அவகேடா எனப்படும் எண்ணெய் பழத்தில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் அதிகமாக காணப்படுகிறது. எனவே நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. மேலும் அதிக கொழுப்பு உணவில் இருந்து விலக்கி வைக்கிறது.
முட்டையின் வெள்ளை கருவில் அதிக புரதம் இருக்கும் போது, முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்புகள் நிறைந்துள்ளது. எனவே உங்கள் எடை குறைக்க முழு முட்டையும் அவசியம்.
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் வயிறு மாநிறம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. இதில் ஆக்சிஜனேற்ற பண்புகள் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் ஒமேகா 3 கொழுப்புகளை கொண்டிருப்பதால் நம்முடைய இதயத்திற்கு நல்லது. மேலும் எடை குறைக்கவும் உதவுகின்றன.