சசிகலா நாளை தமிழகம் வரும் நிலையில் ஈபிஎஸ் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் நாளை தமிழகத்திற்கு வர இருப்பதால், அரசியலில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று அனைத்து தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைகிளப்பியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள இளவரசி, சுதாகரனின் 6 சொத்துக்களை அரசுடைமையாக்கி சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் அடிப்படையில் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. சசிகலா நாளை தமிழகம் வரும் நிலையில் ஈபிஎஸ் அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.