தரகம்பட்டியில் தொழிலாளி விஷம் குடித்த உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் வசித்து வரும் லட்சுமணன் மகன் சக்திவேல். 45 வயதுடைய இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். கடந்த சில தினங்களாக தீராத தலைவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனாலும் மேல்சிகிச்சை கொடுக்க வேண்டும் என்ற மருத்துவரின் ஆலோசனைப்படி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிந்தாமணிபட்டி காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் .