இந்தியாவில் 2 கொரோனா மருந்து பரிசோதனையை குழந்தைகளுக்கு செய்யப்போவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்படி இந்தியாவில் ஏற்கனவே இரண்டு கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு கொரோனா மருந்து பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவேக்சின்மருந்தை தயாரித்து உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கான மருந்தை பரிசோதனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
அதன்படி இரண்டு முதல் ஐந்து வயது வரை, 6 முதல் 12 வயது வரை, 12 முதல் 18 வயது வரை என மூன்று பிரிவுகளில் குழந்தைகளுக்குப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இது குழந்தைகளுக்கு உதவும் வகையில் இருந்தாலும், ஏதாவது பக்க விளைவுகள் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு ஆபத்து நேரிடும் அபாயம் அதிகம் உள்ளது. அதனால் பொதுமக்களிடையே இந்த அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.