ருமேனியா நாட்டில் பாதிரியார் ஒருவர் ஞானஸ்தானம் செய்தபோது ஆறு வார குழந்தை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ருமேனியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் சுசீவா நகரத்தில் பழங்கால கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இருந்தது .அதில் பிறந்து ஆறு வாரங்களே ஆன ஒரு குழந்தைக்கு ஞானஸ்தானம் சடங்கு நடைபெற்றது. இந்த சடங்கில் குழந்தைக்கு மூன்று முறை நீருக்குள் மூழ்கடித்து எடுக்க வேண்டும். சடங்கின் போது முதல் முறை மூழ்க வைக்கும் போதே அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. இருப்பினும் தொடர்ந்து சடங்கு முடிக்கப்பட்டது. குழந்தையின் மூக்கில் தண்ணீர் போனதை பார்த்த தந்தை உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் குழந்தை மாரடைப்பால் இறந்து விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பரிசோதனையின் போது குழந்தையின் நுரையீரலில் 110 மில்லி லிட்டர் தண்ணி இருந்ததாகவும், அதன் காரணமாக இதயம் செயலிழந்து குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிரியார் குழந்தையை மூக்கை பிடித்து மூழ்கச் செய்து இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இருந்ததால் குழந்தை இறந்ததாக பாதிரியார் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த பாதிரியார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ருமேனியா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ஞானஸ்தானம் என்ற பெயரில் குறிப்பிட்ட நடைமுறையை நிறுத்திவைக்க சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.