தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அவர்கள் குளித்தலை பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சோதனையில் குளித்தலை பகுதியில் கடை வைத்து நடத்தி கொண்டிருக்கும் பரமசிவன் என்னும் முதியவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பது தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் பரமசிவனை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.