நாட்டை பாதுகாக்க ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் மத்திய அரசானது ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு போன்ற அறிமுகப்படுத்தி மாநிலங்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் முற்போக்கான கருத்துகளுக்கு எதிராகவும், முற்போக்கானவர்களுக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தி அடக்கி வருகிறது. இது வருங்காலத்தில் நாட்டிற்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தகைய செயல்பாடுகளிலிருந்து மனித உரிமைகளை காக்க, இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை மீட்க, உரிமை குரல் கொடுக்க லட்சியத்துடன் பயணிக்கக்கூடிய கூட்டணி கொள்கைகள் தற்போது நாட்டிற்கு தேவைப்படுகிறது. ஆகையால் மிகவும் ஒத்த கருத்துடன் செயல்படக்கூடியவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. நாட்டை விழிப்புடன் பாதுகாக்க ஒருங்கிணைப்பு அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.