விவசாய கடன் ரத்து செய்தது தொடர்பாக முக.ஸ்டாலின் கூறி வந்ததற்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்
திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக.ஸ்டாலின் சங்கரன்கோவில் பேசுகின்ற போது… விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். அதற்கு ஸ்டாலின்… விவசாயிகள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் அதனால் அவர் கடனை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.
எவ்வளவு பெரிய பொய். ஆனால் ஒன்று, ஒரு உண்மையை ஒத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகளை செய்திருக்கிறது. இன்னும் செய்து கொடுக்கும் என்பதை உணர்ந்து அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.பதினாறு லட்சத்தி நாற்பத்தி மூன்றாயிரம் விவசாயம் இன்றைக்கு பயிர் கடன் தள்ளுபடியிலே பயன் அடைந்திருக்கின்றார்கள். இதனால் ஸ்டாலின் மன குழப்பத்தில் இருக்கின்றார். அதனால தான் இப்படி பேசி வருகின்றார்.
விவசாய கடன்களை கட்சியின் பார்த்து நான் தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்து தள்ளுபடி செய்து இருக்கிறோம்.அதனை ஸ்டாலின் உணர வேண்டும். இன்றைக்கு கூட்டுறவு சங்கத்திலே கடன் பெற்றவர்கள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்கள் இல்லை. அவர்கள் விவசாயிகள், வேளாண் பணியை மேற்கொள்கின்றவர்கள். அவர்கள் பயிர் செய்வதற்காக பயிர் கடன் பெறுகின்றார்கள். இதுதான் எதார்த்த உண்மை.
இது அதிமுக, இது திமுக, இது காங்கிரஸ், இது கம்யூனிஸ்ட் அப்படி கச்சியை பார்த்தா கடன் கொடுக்கிறோம். கிடையாது..! விவசாயிகளுக்கு, வேளாண்மை செய்ய கடன் கொடுக்கின்றோம் என தமிழக முதல்வர் தெரிவித்தார்.