சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று நாளை தமிழகம் வர இருக்கும் சசிகலாவிற்கு வழிநெடுக வரவேற்பு கொடுக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக பெங்களூர் தொடங்கி தமிழகம் வரை சாலைகளில் சசிகலா பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அனுமதி இல்லாமல் வைக்கப்படும் பேனர்களை கர்நாடக மாநில காவல்துறை வந்தது.
இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் சசிகலா தங்கியுள்ள விடுதிக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர். பேனர்களை கிழித்து எறிந்த கன்னட அமைப்பினர் விடுதிக்கு வெளியே தீ கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.