கேரள மாநிலத்தில் ஆறு வயது மகனை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் பாலக்காடு என்ற பகுதியில் சாகிஷா என்பவர் தனது மூன்றாவது மகன் ஆமில் என்பவரை கழிவறையில் வைத்து கொலை செய்துள்ளார். சமையலறையில் உள்ள கத்தியால் சிறுவனை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடந்துள்ளது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர். அதன்பிறகு நடத்திய விசாரணையில், மகனை பலியிடுமாறு கடவுளிடமிருந்து கட்டளை வந்ததால் கொலை செய்ததாக கூறியுள்ளார். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.