பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வடிக்கையாளர்களுக்க போன் கால் மூலம் பணம் பெரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
நம்முடைய அவசர தேவைக்காக பணம் தேவைப்படும் போது ஏடிஎம் மையத்திற்கு சென்று காத்து இருந்து பணத்தை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுவும் கிராமப்புறங்களில் இருந்தால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலையில்பண பரிவர்த்தனைகள் நவீனமயமாகி வரும் இந்த காலகட்டத்தில் நாமும் அதற்கு மாறிக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொபைல் போன் கால் செய்தாலே போதும் பணம் வீடு தேடி வந்துவிடும்.
என்னென்ன சேவைகள் உள்ளன என்பது குறித்து இப்போது பார்க்கலாம் .
Pick Up சேவைகள்:
1. செக்/வரைவோலை/pay-orders
2. புதிய செக் புக்கிற்கான Demand slips
3. Form 15G மற்றும் 15H
4. IT invoice approval
Delivery சேவைகள்:
1. Non-personal check/draft/pay-order
2. Fixed deposit receipts
3. வங்கிக் கணக்கு விவரங்கள்
4. TDS, Form 16
இதர சேவைகள்:
1. பணம் எடுத்தல்
2. வாழ்வு சான்றிதழ் (ஜீவன் பிரமாண பத்திரம்)
எப்படி சேவையை பெறுவது?
18001037188 அல்லது 18001213721 என்ற இலவச அழைப்பு எண்களுக்கு கால் செய்தாலே போதும். மேலும் www.psbdsb.in என்ற இணையதளத்திலும் சேவையை பெறலாம்.