Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களுக்கு புதுசு வேண்டாம்… பழைய திட்டமே போதுமானது… சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்… !!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதோடு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைவர் பாலமுருகன் என்பவரது தலைமையில் நடைபெற்றுள்ளது.

அதோடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் கருப்பையா  உரையாற்றியுள்ளார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் சந்திரமோகன், முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி, நாம் தமிழர் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் பாலன், நீதித்துறை மாவட்ட செயலாளர் சுந்தரராஜன் போன்றோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். மேலும் வத்திராயிருப்பு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை கைது செய்து விட்டனர்.

Categories

Tech |