2-ஆவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மானூர் பாட்டாளி அம்மன் கோவில் தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகள் சிவரஞ்சனி ஆகியோருடன் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமலை பாளையம் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில்சிவரஞ்சனிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த அவர் 2 வயது குழந்தையுடன் தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அதன்பின் கடந்த மாதம் சிவரஞ்சனி இரண்டாவதாக அவளது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் 2-வது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்த சிவரஞ்சனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிவரஞ்சனி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அலங்கியம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.