9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவரக்ளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து ஆங்லினே வழியாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி இந்த பாடத்தை 40% குறைத்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்படுகிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் இயங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 9 & 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்க உள்ளது. ஏற்கனவே 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் செயல்படும். தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றை மாணவர்களும், ஆச்சிரியர்களும் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.