சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். தற்போது அவர் சென்னை புறப்பட்டு இருக்கிறார். சென்னை வருகின்ற வழியில் பல்வேறு விதமான வரவேற்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அமமுக கழக தொண்டர்கள் அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனர். காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள்.
சசிகலா புறப்பட்டு வந்திருக்கக்கூடிய காரில் அதிமுக கொடி கட்டப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் மருத்துவமனையில் இருந்து அவர் திரும்பும் போது அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே கிளம்பினார். அது அவருடைய தோழி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடைய கார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதிமுக அமைச்சர்கள் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சசிகலா சென்னை புறப்பட்டு இருக்கின்ற காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருக்கிறது.
7.45 மணிக்கு அவர் புறப்படுவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்ததை போலவே சசிகலா சென்னை கிளம்பியுள்ளார். சசிகலா வரும் வழியில் சிலர் அதிமுக கொடியுடனும் வந்தார்கள்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் பயணத்திற்குப் பிறகு சசிகலா தமிழ்நாட்டு எல்லைக்கு வந்தடைவார் எனவும், அங்கே வேறொரு வாகனத்தில் சசிகலா மாறுவார் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படி மாறும் பட்சத்தில் அந்த வாகனத்திலும் அதிமுக கட்சி கொடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது.