சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் தமிழக எல்லைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று அமைச்சர்கள் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் தமிழக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் பல்வேறு கட்டுப்பாடுகளும் நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட பெங்களூரில் இருந்து சென்னை வரும் சசிகலாவின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ராஜமாதாவே… என்று தொண்டர்கள் வழிநெடுகிலும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். சசிகலா வருகையையொட்டி டுவிட்டரில் சசிகலா, தமிழ்நாடு வெல்கம் சின்னம்மா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.