Categories
லைப் ஸ்டைல்

பல பிரச்சனைகளுக்கு அருமருந்து… பப்பாளி இலையில் இவ்வளவு நன்மையா?….!!!

பப்பாளி இலையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பப்பாளிப்பழத்தை போலவே அதன் இலைகளிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக பப்பாளி இலை ஜூஸ் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்தி, சரும அழகை அதிகரிக்கிறது. பப்பாளி இலையின் சாரை தலையில் தேய்த்தால் முடி செழுமையாக வளரும். பப்பாளி இலைச்சாறு செரிமானத்துக்கு உதவுகிறது. மேலும் ஒவ்வாமை அலர்ஜி போன்ற சரும பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.

பப்பாளி இலையை அரைத்து கட்டி மேல் தடவினால் கட்டி உடையும். வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். காயம் பட்ட இடத்தில் பூசினால் காயங்களுக்கு விரைந்து குணம் கிடைக்கும். படர்தாமரை என்று உடல் இடுக்குகளில் ஏற்படும் தோல் பிரச்சனைக்கு பப்பாளி இலையை அரைத்துப் பூசினால் நல்ல குணம் கிடைக்கும். பப்பாளி இலையில் அண்டிமலரியல் மற்றும் ஆன்டி கேன்சர் பொருட்கள் உள்ளதால் இதன் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் அந்த நோய் பாதிப்பை குறைக்கலாம்.

Categories

Tech |