Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே…! இப்படி ஒரு வரவேற்பா ? அதிமுக கொடியோடு குவியும் தொண்டர்கள்…!!

இன்னும் சற்று நேரத்தில் பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழக எல்லையை வந்தடைய இருக்கிறார். குறிப்பாக தமிழக எல்லையான ஓசூரை அடுத்த ஜுஜுவாடி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வரவேற்பளிக்க காத்திருக்கிறார்கள். ஏற்கனவே காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி அதிமுக கொடியை சசிகலா காரில் பொருத்தக்கூடாது, தொண்டர்கள் அந்த கொடியை பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது அதையும் மீறி இன்று சசிகலாவை வரவேற்பதற்காக காத்திருந்த தொண்டர்கள் சிலர் அதிமுகவின் கொடியை ஏந்தியபடி வரவேற்பு அளிக்க காத்திருக்கிறார்கள். அவர்களை சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

இதுதவிர ஒருபுறம் சசிகலாவிற்கு வரவேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஏராளமானோர் ஜூஜூவாடி எல்லையில் காத்திருக்கிறார்கள். சசிகலாவுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து அவர்களை வரவேற்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருக்கிறார்கள். அதேபோல சசிகலாவின் ஆதரவாளர்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மேளதாளங்கள் முழங்க இந்த பகுதியில் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Categories

Tech |