இன்று காலை 10 மணி முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்-13 ஆம் தேதி நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. இதில் டிக்கெட் விலை “C, D, E” Lower – Rs.100/- , “D, E” Upper – Rs.150/-, “F, H, I, J, K ” Lower – Rs.150/-, “I, J, K” Upper – Rs.200/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு நடைபெறுகிறது. www.paytm.com, www.insider.in தளங்களில் காலை 10 மணி முதல் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் கவுண்டர்களின் டிக்கெட் விற்பனை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.