Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா வந்த காரில் அதிமுக கொடி அகற்றம்… பதற்றம்… உச்சகட்ட பரபரப்பு…!!!

ஓசூர் அருகே சசிகலா வந்து கொண்டிருந்த போது அவரின் காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று தமிழகம் வருகிறார். அதன்படி சில நிமிடங்களுக்கு பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்ட சசிகலாவிற்கு ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் ஓசூர் எல்லையில் வரவேற்பு அளிக்க உள்ள இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சசிகலா புறப்பட்ட காரில் அதிமுக கொடி பறந்தது.

இந்நிலையில் ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரிலிருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசாருடன் அதிமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில் வேறு ஒரு காரில் சசிகலா வந்து கொண்டிருக்கிறார்.

Categories

Tech |