தடையை மீறி காரில் திமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று தமிழகம் வருகிறார். அதன்படி சில நிமிடங்களுக்கு பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்ட சசிகலாவிற்கு ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் ஓசூர் எல்லையில் வரவேற்பு அளிக்க உள்ள இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சசிகலா புறப்பட்ட காரில் அதிமுக கொடி பறந்தது.
இந்நிலையில் ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரிலிருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசாருடன் அதிமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் சசிகலா வந்து கொண்டிருந்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதிமுக கொடியுடன் சசிகலா பயணம் செய்ததால் அவர் வந்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதிமுக கொடியுடன் காரில் செல்ல கூடாது என போலீசார் தெரிவித்துள்ளனர். தடையை மீறி கார் திமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நோட்டீஸ் அளித்த நிலையில் சசிகலாவின் காரிலிருந்து கொடியை போலீசார் அகற்றவில்லை. அதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.