Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கும் திரைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது .  இவர் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ . இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா ,நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் ‌ . அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இந்தப் படத்தின் போஸ்டர்கள் , டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .

இந்த படம் எடுக்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆனாலும் ஒரு சில காரணங்களால் ரிலீஸாகாமல் இருந்தது . இந்நிலையில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வருகிற மார்ச் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் . நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின்  வெளியாகும் இந்த படத்தைக்  காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் . செல்வராகவன் அடுத்ததாக நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2  ஆகிய திரைப்படங்களை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |