இந்தியாவில் தேயிலை தொழிலாளர்களின் நலனுக்காக 3000 ரூபாய் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அசாம் சா உதயன் தன் புராஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் அசாமில் 7.47 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கணக்குகளில் ரூ.3000 டெபாசிட் செய்துள்ளது மத்திய அரசு. 2017-18 ஆம் ஆண்டில் அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ரூ.5 ஆயிரம் இரண்டு கட்டங்களாக டெபாசிட் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு வெளியான 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் தேயிலைத் தொழிலாளர்களின் நலனுக்காக ரூ .1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி தற்போது மூன்றாம் தவணையாக ரூ.3000, அம்மாநில ஊழியர்களின் வங்கிக்கணக்குகளில் மத்திய அரசு நேரடியாக டெபாசிட் செய்துள்ளது.