வீட்டின் பின்புறத்தில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செல்லூர் சுனாமி குடியிருப்பில் புதுச்சேரி மாநில சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியபோது அங்கு வீரலட்சுமி என்பவர் அவரது வீட்டின் பின்புறத்தில் புதுச்சேரி மாநில சாராயத்தை பதுக்கி வைத்து பாக்கெட் போட்டு சுற்றுவட்டார பகுதிகளில் விற்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் வீரலட்சுமியை கைது செய்து அவரிடமிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள சாராயம் மற்றும் பாக்கெட் போட பயன்படுத்திய எந்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.