Categories
உலக செய்திகள்

பிப்.15 முதல்…. பிரிட்டனின் புதிய விதிமுறை…. 4 முறை எடுத்தே ஆகணும்…!!

நான்கு முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை பிரிட்டன் அமல்படுத்த உள்ளது

பிரிட்டனில் புதிதாக விதிமுறைகள் அமல் படுத்தியுள்ளனர். அதாவது கொரோனா அச்சுறுத்தல் பட்டியலில் இடம் பெறாத பகுதிகளிலிருந்து பிரிட்டன் திரும்பும் பயணிகள் கண்டிப்பாக நான்கு முறை சோதனைக்கு உட்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அதிகமாக பரவும் 33 நாடுகளிலிருந்து பிரிட்டன் திரும்பும்  பயணிகள் கண்டிப்பாக தங்களை ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த  விதிமுறை பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் எனவும்அறிவித்துள்ளது.

33 நாடுகளின் பட்டியலில் இடம்பெறாத நாடுகளிலிருந்து பிரிட்டன் திரும்பும் பயணிகள் கண்டிப்பாக தங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதுடன் கட்டாயமாக மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .4 வது சோதனை தனிமைப்படுத்துதல் காலத்தின் நடுவில் மேற்கொள்ளவேண்டும் என பயணிகள்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி இந்த நான்கு சோதனைகளுக்கான கட்டணம் அவரவரின் பொறுப்பு எனவும் இந்த சோதனை மேற்கொள்ளாத பயணிகள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும்  கூறப்பட்டுள்ளது. கட்டணம் குறித்து தெளிவான தகவல் இல்லை எனினும் ஒரு சோதனைக்கு  150 பவுண்டுகள் வரை வசூலிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது . 72 மணி நேரத்திற்கு முன்னர் ஒருமுறை கொரோனா பரிசோதனை பிரிட்டன் திரும்பும் பயணிகள் எடுக்க வேண்டும் .

எனவே பிரிட்டன் திரும்பிய பின்னரும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை தனிமைப்படுத்துதல் தொடங்கிய இரண்டாவது நாளிலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். மேலும் எட்டாவது நாலாவது நாள் கட்டாயமாக பயணிகள் பரிசோதனை  எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

Categories

Tech |