Categories
அரசியல் மாநில செய்திகள்

முத்து மாரியம்மனிடம்…. கண்ணீர் விட்டு சபதம் எடுத்த சசிகலா…!!

சசிகலா ஓசூர் முத்துமாரியம்மன் கோவிலில் கண்ணீர் மல்க சசிகலா வழிபாடு செய்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பெங்களுருவில் தங்கி இருந்தார். இதையடுத்து தற்போது தமிழகம் வந்துள்ளார்.

இந்நிலையில் ஓசூர் முத்துமாரியம்மன் கோவிலில் கண்ணீர் மல்க சசிகலா வழிபாடு செய்தார். தரிசனம் செய்த பிறகு சிறிது நேரம் அமைதியாக கண்மூடி தியானம் செய்தார். மனதிற்குள் இருந்த ரணங்களையும், சொல்ல முடியாத வேதனையையும் வெளிப்படுத்தும் வகையில் மனம் உருகி வழிபாடு செய்த அவர் கோயிலில் சபதம் எடுத்துக் கொண்டார்.

Categories

Tech |