சசிகலா காரை வழிமறித்து இளைஞர் ஒருவர் சசிகலாவுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பெங்களுருவில் தங்கி இருந்தார். இதையடுத்து தற்போது தமிழகம் வந்துள்ளார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே சசிகலா காரில் வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் காரை வழிமறித்து செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். உடனே சசி ஆதரவாளர்களே அந்த இளைஞரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் சசியுடன் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று அந்த முழக்கம் எழுப்பியுள்ளார். இதை பார்த்துக்கொண்டிருந்த சசிகலா அவரை அழைத்து செல்பி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.