Categories
சினிமா தமிழ் சினிமா

காதலர் தின ஸ்பெஷல் நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது .

தொலைக்காட்சிகளில் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக பல புதிய நிகழ்ச்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது . அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ‘காதலே காதலே’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது . இதில் சீரியல் நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றுள்ளனர் .

மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினியும் பிக்பாஸ் பிரபலமுமான அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார் . இந்த காதலர் தின ஸ்பெஷல் காதலே காதலே நிகழ்ச்சியில் பிரபல நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷாவுடன்  இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

Categories

Tech |