கொரோனா பரவல் காரணமாக 11 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்துகள் மார்ச் ஒன்று முதல் இயக்க வாய்ப்பு உள்ளதாக அரசு கூறியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன பஸ்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா குறைந்து வந்த நிலையில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் போக்குவரத்து துறை சார்பில் பஸ்களை இயக்க சுகாதார துறையிடம் அனுமதி கோரப்பட்டது.
வழிகாட்டு நெறிமுறைகள் உடன் இயக்க அனுமதி கிடைத்ததால் 1ஆம் தேதி முதல் குளிர்சாதன பஸ்களை இயக்கி கொள்ள போக்குவரத்து துறை கமிஷனர் ஜவகர், அமைச்சர் விஜயபாஸ்கர் அனுமதி கோரினார். அதற்கு அமைச்சரும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில் குளிர்சாதன பஸ்களை இயக்க அரசு அனுமதி அளிப்பது உறுதியாகி உள்ளதால் முதல் கட்டமாக பிப்ரவரி 25 முதல் எஸ்டிசி பஸ்கள் இயக்கப்படும். மார்ச் 1 முதல் அனைத்து குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படும் என்று கூறியுள்ளனர்.