பேஸ்புக் நிறுவனம் பயனாளர்கள் அவர்களின் ப்ரொபைலை லாக் செய்வதற்கான திறன் உள்ளிட்ட தனியுரிமை விருப்பங்களை வழங்கியுள்ளது.
பயனாளர்களின் ப்ரொபைலை லாக் செய்வதன் மூலம் பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் இல்லாத நபர்களுக்கு ப்ரொஃபைல் விவரங்களை காட்டமுடியாது. லாக் செய்யப்பட்ட ப்ரொபைல், டைம்லைன் ப்ரோபைல், படம் மற்றும் கவர் போட்டோ, ஸ்டோரிஸ் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே காண்பிக்கும். உங்கள் கணக்கில் உள்ள பப்ளிக் பதிவுகள் இனி இனி பொதுவில் இருக்காது. மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
பேஸ்புக் ப்ரோபைலை லாக் செய்ய விரும்பினால் அதை மொபைல் பயன்பாட்டிலிருந்து அல்லது உங்கள் டெஸ்க்டாப் மூலமாக செய்யலாம். இருப்பினும் பேஸ்புக்கில் உங்கள் புரோஃபிலே ஐ லாக் செய்ய நேரடி விருப்பமில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு மாற்று வழி உண்டு. இந்த பதிவை ஆண்ட்ராய்டு மூலம் எப்படி பேஸ்புக் ப்ரோபைலை லாக் செய்வது என்பதை பார்ப்போம்.
பேஸ்புக் பயன்பாட்டை திறந்து உங்கள் ப்ரோபைலை கிளிக் செய்து ஸ்டோரி என்பதற்கு அடுத்தபடியாக மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவை திறக்கவேண்டும். நீங்கள் லாக் ப்ரோபைல் விருப்பத்தை பார்க்க முடியும். அதை கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்தில் உங்கள் ப்ரொஃபைலை லாக் செய்யபட்டால் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து ஒரு சுருக்கத்தை உங்களுக்கு காட்டும். அதில் உள்ள பைல் விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். ‘You Locked Your Profile’ என்று பாப்-அப் மெசேஜ் ஒன்றை நீங்கள் காண முடியும், இப்போது OK என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் உங்களின் ப்ரொபைல் லாக் செய்யப்பட்டது.