Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் ‘விக்ரம்’ படத்துக்கு முன் புதிய படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்… ஹீரோ யார் தெரியுமா?…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலின் ‘விக்ரம்’ படத்தை இயக்குவதற்கு முன் பிரபல நடிகரின் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் மாநகரம் ,கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் லோகேஷ் கனகராஜ் . இவர் அடுத்ததாக நடிகர் கமலின் ‘விக்ரம்’ படத்தை இயக்க இருப்பதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகியிருந்தது . இருப்பினும் நடிகர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதால் ‘விக்ரம்’ படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை . தேர்தலுக்குப் பின்னரே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது .

Image result for vijay sethupathi

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தை இயக்குவதற்கு முன்னதாக நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |