கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரா என்ற இடத்தில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் நிலையம் மற்றும் பஸ் டிப்போ உள்ளது. நேற்று இரவு அங்கு வந்த ஒரு விரைவு பஸ் ஒன்று ஓட்டம் முடிந்து பஸ் நிலையம் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. இரவில் டிப்போ பணியாளர்கள் டோக்கன் அடிப்படையில் பஸ்சை சர்வீஸ் செய்வதற்காக எடுக்க சென்றனர்.
ஆனால் பஸ் நிறுத்தி இருந்த இடத்தில் இருந்து மாயமாகி இருந்தது. பல மணி நேரம் தேடியும் கிடைக்காத நிலையில் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் தேடி வந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் அதே பகுதியை பாரிப்பள்ளி என்ற இடத்தில் பஸ் அனாதையாக நின்றது தெரிய வந்தது. போலீஸ் உதவியுடன் அந்த பஸ்சை மீட்டனர். பல மணி நேரம் போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசாரையும் அலற வைத்த அந்த செயலை செய்த நபர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.