Categories
உலக செய்திகள்

டாப்-அப் தடுப்பூசி… பிரிட்டன் அரசு விதித்துள்ள புதிய திட்டம்… பொதுமக்கள் மகிழ்ச்சி…!

பிரிட்டனில் வருடாந்திர டாப்-அப் நோய் தடுப்பு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸின் வகைகளை எதிர் கொள்வதற்காக உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் அரசு வருடாந்திர டாப் அப் நோய்த்தடுப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் நதீம் ஜஹாவி தெரிவித்ததாவது, ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சலுக்கு வழங்கப்படும் தடுப்பூசியை திட்டத்தின் போது வருடாந்திர கொரோனா தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சமீபத்தில் அஸ்ட்ரா ஜனகா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் ஏமாற்றம் அளித்துள்ளது. ஆகையால் தென்னாப்பிரிக்க வகை வைரஸுக்கு எதிராக பாதுகாப்பை தரும் ஒரு தடுப்பூசியை தயாரிக்க பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் பிரிட்டனில் பள்ளிகள், வணிகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள மூன்றாவது தேசிய ஊரடங்கை விரைவில் நீக்குவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை செய்து வருகிறார்.

Categories

Tech |