Categories
வைரல்

“தப்பை தட்டி கேட்கும் தனிமனிதன்” ஆபாச வீடியோ ரசிகர்களே…உத்தம வில்லனிடம் ஜாக்கிரத்தை..!!

tiktok செயலியில் ஆபாசமாக பதிவிடுவோரின் ஐடிகளை hack செய்து வருவதாக தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

தற்பொழுது தமிழகத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு செயலி TIK TOK  இந்த செயலியில் பலர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி பாராட்டுகளை பெற்று நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் இதனை தவறான முறையில் சொல்லப்போனால் ஆபாச தளமாகவே  இதை மாற்றி பயன்படுத்தி வந்தனர்.

இதை கண்டித்து உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பாக இதனை இந்தியாவில் தடை செய்தது அதன்பின் மீண்டும் செயலியானது வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தடைவிதிக்கப்பட்ட பின்பும் அம்மாதிரியான செயல்கள் குறைந்தபாடில்லை. மீண்டும் TIKTOK  செயலியை ஆபாச தளமாகவே பயன்படுத்தி வந்தனர்.

இது பலருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் அரசாங்கம் இதற்கு சரியான நடவெடிக்கை எடுக்காத பட்சத்தில் தனிமனிதன் ஒருவர் இதனை தட்டி கேட்டு வருகிறார்.அவர் உத்தம வில்லன் என்ற பெயரில் தற்பொழுது tiktok செயலியில் ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

Image result for உத்தம வில்லன் tik tok

 

இவர் tiktok க்கில்  தேவையற்ற ஆபாச வீடியோக்களை பதிவிடுவோர்,பிறர் மனதை புண்படுத்தாமாறு நடந்து கொள்வோர் ஆகியோரின் ஐடிகளை hack செய்துவிடுவார். அதன்பின் hack செய்யப்பட்ட நபர் பதிவிட்ட தவறான வீடியோ குறித்து மன்னிப்பு கேட்டு மற்றொரு வீடியோவை பதிவு செய்த பின்பே அவர்களது ஐடியை திருப்பி தருவார். இதனால் tiktok செயலியை தவறாக பயன்படுத்தும் அனைவரும் உத்தம வில்லனின்  பெயரைக் கேட்டாலே பயத்தில் நடுங்கி வருகின்றனர்.

Categories

Tech |