Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இவர் உயிரோடு இருந்தால் நம்மை வாழ விடமாட்டார்”… கள்ளக்காதலனுடன் கைக்கோர்த்து… கணவனை எரித்த மனைவி..!!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கணவனை பெற்றோலை ஊற்றி  கொளுத்தி விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் க. புதுப்பட்டி அருகே  கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பரிசோதனையில் அவர் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள போயன்மார் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது . இவரின் மனைவி முத்துமாரி. இவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கணவன் வேலைக்கு சென்றால் எப்போதாவது தான் வீட்டிற்கு வருவார், என்பதால் தேடாமல் விட்டு விட்டதாக அவர் கூறினார்.

ஆனாலும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து அவரைக் கண்காணிக்க தொடங்கியுள்ளன.ர் அப்போதுதான் அவரது கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்தது. அதற்காக தனது கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய இது கண்டுபிடிக்கப்பட்டது. செங்கல் சூளை வைத்து நடத்தி வருபவர் செல்வராஜ். செல்வராஜ் முத்துகுமாரியிடம் நெருங்கி பழகியுள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் கள்ளத்தொடர்பு முத்துமாரியின் கணவர் நாகராஜனுக்கு தெரியவரவே, இவர்களை கண்டித்துள்ளனர்.

தங்களது உல்லாச வாழ்க்கைக்கு இவர் தடையாக இருப்பார் என்று எண்ணி நாகராஜனை கொலை செய்ய திட்டமிட்டு சம்பவ தினத்தன்று நாகராஜுக்கு அதிகளவில் மதுபானம் வாங்கி கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளனர். பின்னர் உடல் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து முத்துமாரி கைது செய்து, தலைமறைவாக உள்ள செல்வராஜை தேடி வருகின்றனர்,

Categories

Tech |