பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிக அளவில் பரவுவதால் அந்நாட்டில் பல மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்க திட்டமிடப்படுகிறது.
இந்த ஆண்டே பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று NHS தலைவர்களுடன் அமைச்சர்கள் விவாதித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி மருந்தகங்க்ளில் இந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை நாம் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மூன்றாவது டோஸ் எடுத்துக் கொள்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இப்போது கொரோனாவால் அதிகளவு மக்கள் பாதிக்கப்படுவதால் அனைவருக்கும் இந்த மூன்றாவது டோஸ் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது வழங்கிவரும் தடுப்பூசி மையங்களிலே இந்த தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,000 நோயாளிகளில் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உருவாக்கிய Oxford -AstraZeneca தடுப்பூசியால் தென் ஆப்பிரிக்கா உருமாறிய வைரசுக்கு எதிராக எந்த பலனும் இல்லை என அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த தடுப்பூசி உருமாற்றம் அடைந்த கொரோனாவை தடுத்தாலும் கூட தொற்று பரவுவதை தடுத்து நிறுத்த முடியாது என்பது நிபுணர்களின் கருத்து. இதனால் தென்னாப்பிரிக்காவில் Oxford-AstraZeneca தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு நிபுணர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. தென்னாபிரிக்கா உருமாற்றம் கண்ட தொற்று பாதிப்பு பிரிட்டனில் மட்டும் நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 2 டோஸ் மருந்து வழங்கி வந்த நிலையில் தற்போது 3 வது டோஸ் வழங்க திட்டமிடப்பட்டு வருவது பாதிப்பின் தாக்கத்தின் வெளிப்பாடு என்று சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.