கிருஷ்ணகிரியில் சுங்க சாவடி அருகே சசிகலாவை வரவேற்க பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே சசிகலாவை வரவேற்க நின்றிந்தார்கள் பட்டாசை கொளுத்தி உள்ளன. இதனால் இரண்டு கார் தீப்பற்றி எரிந்தது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே காரின் அருகே வைத்து சில நபர்கள் பட்டாசுகளை வெடித்து உள்ளனர். இதில் ஒரு காரில் பற்றிய தீ அருகே இருந்த காருக்கும் பரவியது. தீ பிடித்து எரிந்த கார் வெடித்து விடப்போகிறது என்று அஞ்சி அங்கு இருந்தவர்கள் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனால் தீயை அணைக்க ஆளில்லாமல் இரண்டு கார்களும் முற்றிலும் நாசமாகியது. மேலும் இரு கார்கள் தீப்பற்றிய நிலையில் அருகிலிருந்த மற்றொரு காரின் கண்ணாடியை உடைத்து அவசர அவசரமாக அந்த காரை அங்கிருந்து நகர்த்தி சேதத்தையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது.