Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகளுக்கு திருமணம்… நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்…!!!

தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் அவர்களின் மகள்  திருமணத்தில் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர் .

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் சந்தானம், ஜீவா நடிப்பில் வெளியான யா யா மற்றும்  விக்ராந்த், வசுந்த்ரா நடிப்பில் வெளியான பக்ரீத் ஆகிய படங்களை தயாரித்துள்ளார் . இந்நிலையில் இவரின் மகள் டாக்டர் லாவண்யா முருகராஜ்க்கும், டாக்டர் ரூபன் ஏழுமலை அவர்களுக்கும் செங்கல்பட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.

தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமணம் - பிரபலங்கள் நேரில் வாழ்த்து

இதில் இயக்குனர் ஹரி அவரது மனைவி பிரீதா, தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா ,ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால், திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ்சந்திரபோஸ், தங்கராஜ், பூச்சி முருகன், வின்னர் ராமச்சந்திரன் ,கலை இயக்குனர் கதிர் , நடிகர்கள் பொன்வண்ணன், ரவி மரியா ,ஜெரால்ட் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர் .

Categories

Tech |