Categories
தேசிய செய்திகள்

புறப்பட்ட ஹெலிகாப்டர்கள்…. மீட்கப்பட்ட 14 சடலங்கள்… தீவிரமாக களமிறங்கிய வீரர்கள்… தொடரும் தேடுதல் பணி…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமாத் என்ற பகுதியில் பனி பாறை உடைந்து உருகியதால் தவுளி கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பெரு வெள்ளத்தால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை, பாலங்கள் மற்றும் நீர்மின் திட்ட கட்டமைப்புகள் அனைத்தும் முழுமையாக அடித்துச் செல்லப்பட்ட தோடு, நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காணாமல் போய்விட்டனர். இந்நிலையில் காணாமல் போன தொழிலாளர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதுவரை பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் 14 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பெரு வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேர் உயிருடன் மீட்பு குழுவால் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையினர் உடைந்த அணையை ஒட்டியுள்ள சுரங்கங்களில் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, மீட்பு பணியானது பல்வேறு பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது எனவும், 12 பேர் ஒரு சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மற்றொரு சுரங்கத்தில் சிக்கியுள்ள 30 பேரை மீட்கும் பணியில் சுமார் 300 வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், 170 பேரை காணவில்லை என உள்ளூர் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டேராடூனில் இருந்து ஜோஷிமத் பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்டு அழைத்து வருவதற்காக விமானப்படை ஹெலிகாப்டர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |