Categories
உலக செய்திகள்

அப்போ இது உண்மை இல்லையா…. உலகெங்கும் வைரலாகிய புகைப்படம்… ஆய்வில் வெளியான சில தகவல்கள்…!!

சமூக வலைதளங்களில் பேராசிரியரின் புகைப்படமானது சோகமான கதையுடன் வைரலாகி வருவது போலியான பதிவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் ஒருவர் குழந்தையை தன் மீது வைத்துக்கொண்டு பாடம் எடுப்பது போல் உள்ள புகைப்படம் நாடு முழுக்க வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் குறித்த பதிவுகளில் அதில் இருக்கும் கல்லூரி பேராசிரியர், அவரது மனைவி பிரசவத்தின் போது இறந்து விட்டதால் தனது குழந்தையுடன் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த புகைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது எனவும், அந்த புகைப்படத்தில் இருப்பவர் மெக்சிகோவில் வசித்து வரும் பேராசிரியர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த பேராசிரியர் வகுப்பறையில் உள்ள மாணவரின் குழந்தை பாடம் குறித்துக்கொள்ள இடையூறாக இருந்ததால் பேராசிரியர் அந்த குழந்தையை வாங்கி தன் மார்போடு சேர்த்து வைத்துக் பாடம் நடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது ஐந்து ஆண்டுகள் கழித்து வைரலாகி இருப்பதும், அந்த புகைப்படத்தில் இருப்பது பேராசிரியரின் குழந்தை இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை வைத்து போலியான செய்திகளை பரப்பி வந்துள்ளனர்.

Categories

Tech |